கொரோனா நோயாளிகளிடம் குப்பை பெறும் டோம்னிக்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
20:14

ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி, தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெயில் கூடுதலாக கொளுத்துகிற ஒரு நண்பகல் வேளையில், சென்னை மந்தைவெளி டிரஸ்ட்பாக்கத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் பேட்டரி வண்டி ஒன்று சத்தமின்றி வருகிறது.



அந்த வண்டியை ஓட்டி வந்தவர், தன் உடலை முழுமையாக, 'பிபிஇ - கிட்' கொண்டு மூடியிருக்கிறார். ஒரு 'அபார்ட்மென்ட்' முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழைகிறார், சிறிது நேரம் கழித்து இறுகக்கட்டிய மஞ்சள் பையுடன் வெளியே வருகிறார்.



கிட்ட வராதீங்க...





இந்த ஊரடங்கிலும் கொளுத்துகிற வெயிலை பொருட்படுத்தாமல், கடமையை செய்யும் அவரைப்பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், படமெடுத்து விட்டு நெருங்கிய போது, 'கிட்ட வராதீங்க... கிட்ட வராதீங்க...' என்று கையை நீட்டி நம்மை நெருங்க விடாமல் தடுத்தார். ஏன் என்று துாரத்தில் இருந்து சைகையில் கேட்ட போது, காற்றிலேயே அவரது போன் எண்ணை எழுதிக் காண்பித்தார். அந்த எண்ணில் பேசும்படி சொல்லிவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.



சிறிது நேரம் கழித்து, அவர் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டோம்.அவரது பெயர் டோம்னிக், 37; டாக்சி டிரைவராக இருந்தவர், கொரோனா தொற்று பரவலால் தொழிலை இழந்து தவித்தார். அப்போது, மாநகராட்சி சார்பில், பேட்டரி வண்டியை ஓட்டியபடி, குப்பையை சேகரிக்கும் இந்த தற்காலிக வேலை கிடைத்தது. காலை 6:00ல் இருந்து பகல் 1:00 மணி வரை வேலை. ஏரியா வாரியாக பிரித்து கொடுத்து விடுவர்.அந்தந்த ஏரியாவில் உள்ள குப்பையை சேகரித்து, உரிய இடத்தில் கொண்டு போய் கொட்டுவது தான் என்னைப் போன்றவர்களுக்கு வேலை.



'ரிஸ்க்'





இந்நிலையில் தான், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த முறை பாதிக்கப்பட்டவர்களை, கடந்த முறை போல தட்டியடித்தோ, தனிமைப்படுத்தியோ, அவர்களது மனஉளைச்சலை அரசு அதிகப்படுத்த வில்லை. இன்று அவர்களுக்கு என்றால், நாளை நமக்கு என்பது போல, பொதுமக்களும் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டனர். சாப்பாடு வீடு தேடி வந்து விடுகிறது.



அவர்களது ஒரே பிரச்னை வீட்டில் சேரும் குப்பையை, அன்றாடம் அகற்றுவது தான். 'கொரோனா, பாசிட்டிவ் என்று தெரிந்த பிறகும், அவர்களது வீடுகளுக்கு சென்று, அவர்கள் வீட்டு குப்பையை சேகரித்து வரும், 'ரிஸ்க்'கான வேலை இருக்கு; விருப்பமுள்ளவர்கள் முன் வரலாம்' என்று மண்டல அதிகாரி கூறினார்.



மனிதநேயம்





டோம்னிக் ஆகிய நான், நசீர், பிரசாத் ஆகியோர் தயார் என்றோம். பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கு தகவல் தந்து விடுவர். அவர்கள் குப்பையை வீட்டிற்கு வெளியே வைத்தால், அக்கம் பக்கம் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதால், அவர்களது குப்பையை கட்டி வீட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.



நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த வீட்டிற்கு போய் கதவை தட்டியதும், அவர்கள் கதவை திறந்து கட்டிவைத்துள்ள குப்பையை வெளியே நீட்டுவர்; நாங்கள் எங்களிடம் உள்ள இன்னோரு மஞ்சள் பைக்குள், அந்த குப்பையை போடச்சொல்லி வாங்கிக் கொண்டு, நாங்கள் ஒரு கட்டு கட்டி, அந்த குப்பையை துாக்கி வந்து, வெளியே நிற்கும் வண்டியில் வைத்து கொண்டு போய் தனியாக ஒரு இடத்தில் புதைத்து விடுவோம்.



நாள் தவறாமல், இப்படி பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு சென்று, நேருக்கு நேராக சந்தித்து, அவர்களிடம் இருந்து குப்பையுடன், கிருமியையும் சுமந்து கொண்டு வருவோம் என்பதால், நாங்களும் யாரையும் நெருங்க மாட்டோம்; எங்களிடமும் யாரையும் நெருங்கவிட மாட்டோம். அதனால் தான், உங்களை பக்கத்தில் வரவேண்டாம் என்றோம்.



நாங்கள் கொரோனா பாதித்தவர்களின் குப்பையை குழியில் போடும் இடத்தில், கடைசியாக நாங்கள் அணிந்திருக்கும், 'பிபிஇ - கிட்'டையும் சேர்த்து போட்டுவிட்டு, குப்பைக் கிடங்கு பக்கத்தில் உள்ள குழாய்களிலேயே குளித்து விடுவோம். பின் வீட்டிற்கு வந்த பின், மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு, பிறகே இயல்புக்கு வருவோம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் என்ன செய்கிறேன் என்று தெரியும்.



'தப்பு செய்யவில்லை; உழைத்து தானே பிழைக்கிறோம்; அதிலும் ஒரு படி மேலே போய், மனித நேயத்துடன் செயல்படுகிறோம்' எனக்கூறி, குடும்பத்தில் பெருமை தான் படுகின்றனர். கொரோனா, பாசிட்டிவ் நோயாளிகள் குப்பையை கொடுக்கும் போது, கண்களில் காட்டும் நன்றிக்கும், அன்பிற்கும் முன், நான் செய்யும் இந்த காரியம் ஒன்றும் பெரிதில்லை என்று கூறி முடித்தார், டோம்னிக்.



இவருக்கு எப்ஸிகா, 37 என்ற மனைவியும், 7 வயதில் பிரான்சிஸ் என்ற மகனும், 5 வயதில் ஜெசிகா என்ற மகளும் உள்ளனர். மனிதர்கள் தான் எத்தனைவிதம்; டோம்னிக் அதில் மறக்க முடியாத ரகம்!

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X