வாழ்வாதாரம் காக்க திருநங்கையர் கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
வாழ்வாதாரம் காக்க திருநங்கையர் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 மே
2021
22:18

சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில், 2,000 திருநங்கையர் வசித்து வருகின்றனர். அவர்களில் மிகக் குறைந்த அளவினர் மட்டும் சுயதொழில் மற்றும் பணிபுரிகின்றனர். பெரும்பாலானோர் ரயில்களிலும், கடைகளிலும் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.



ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.'சகோதரன்' அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா கூறியதாவது:சென்னை புறநகரில் உள்ள, 2,000 திருநங்கை யருக்கு, கடந்த கொரோனா ஊரடங்கில் பலர் உதவி புரிந்தனர்.தற்போதும் ஊரடங்கால் திருநங்கையர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.எனவே உதவ முன்வரும் தன்னார்வலர்கள், பொருட்களை கொடுக்க விரும்பினால், சகோதரன் அமைப்பின், 95000 57212, 98418 65423 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். காவல் துறை உதவியுடன், நாங்களே நேரில் வந்து பெற்றுச் செல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X