மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
23:01

மதுரை, : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இம்மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மருத்துவமனை கட்ட 2019 ஜன., 27 பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் இம்மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 27 மாதங்கள் கடந்த நிலையிலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணி துவங்கவில்லை.எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா எழுப்பியிருந்தார்.


அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: எய்ம்ஸ் கட்ட கடன் ஒப்பந்தம் 2021 மார்ச் 26 இந்தியா, ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. கடன் தொகை 22,788 பில்லியன் ஜப்பானிஷ் யென் ஆகும். இந்திய ரூபாயில் மதிப்பு 1536.91 கோடியாகும்.தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடி. திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளது. இத்திட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது. மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.


டெண்டர் பணிகளை விரைந்து முடித்து கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து, கட்டுமான பணிகளை விரைந்து துவங்க வேண்டும். 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ்., 60 நர்சிங் இடங்கள் கிடைக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டடங்களை தேர்வு செய்து மருத்துவ மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X