அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்க தடைகோரி மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
23:05

மதுரை : மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.2000 வழங்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் முதல் தவணையாக மே 15 முதல் ரூ.2000 வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் நோக்கம் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வது.2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசிக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4153.39 கோடி வழங்கப்பட உள்ளது. இவ்வகை கார்டுதாரர்களில் மத்திய, மாநில அரசுத்துறைகளின் ஊழியர்கள் அடங்குவர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் சம்பள குறைப்பு இன்றி மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.


இவர்களுக்குரிய நிவாரணத் தொகையை ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்த பயன்படுத்தலாம்.பல்வேறு தொழில், வணிகப் பிரிவினர், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள் கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளனர். இவர்களுக்கு பொருளாதார உதவி தேவை.மத்திய, மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு ராம்குமார் ஆதித்தன் குறிப்பிட்டுஉள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X