வீட்டுக்குள்ளே இருங்க! கொரோனா வைரஸ் தொற்றாது : தொற்றினால் தொடரலாம் 'கருப்பு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 மே
2021
01:55
பதிவு செய்த நாள்
மே 11,2021 23:56

கோவை:தீவிர கொரோனா தொற்றில் இருந்து மீள்வதே, பெரிய விஷயம் என்றிருக்கும் நிலையில், மீண்டு வந்தவர்கள் சிலரை, 'மியூகோர்மைகோசிஸ்' என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, கொரோனா தொற்றை தவிர்க்க, அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பது அவசியம்.



கடந்த நான்கு மாதங்களில் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டில்லி மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில், 100க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.



இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும், கொரோனாவில் இருந்து மீண்ட, சர்க்கரை நோயாளிகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்கின்றனர் டாக்டர்கள்.ஐசியூவில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மட்டுமே, வரும் இந்த அரிய நோய், இரண்டாம் அலை கொரோனா தொற்றுக்கு பிறகு, பல மடங்கு அதிகரித்துள்ளதாக, காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



டாக்டர் அரவிந்தன்: காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர்: இந்த நோய் புதிதல்ல, ஏற்கனவே உள்ளதுதான். உடலில் நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை பாதிக்கும். குறிப்பாக, சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களையும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும், இந்த நோய் தாக்கியது.


இப்போது கொரோனா தொற்று வந்தவர்களையும் தாக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்டீராய்டு மருந்தை பயன்படுத்துவதும், ஒரு காரணமாகும்.இந்த பூஞ்சை நோய் கண், தாடை எலும்பு மற்றும் மூளையை பாதிக்கும்.முன்பு, இந்நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு பேஷன்ட் வருவார்கள். இப்போது வாரம் இரண்டு பேருக்கு மேல் வருகின்றனர்.


சர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரும் கொரோனாவில் சிக்கி விடாமல், வீட்டுக்குள் இருக்க வேண்டும். டாக்டர் ரவிக்குமார்: மருத்துவ கண்காணிப்பாளர் இஎஸ்ஐ மருத்துவமனை.தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு மேல் ஐசியூவில் ஆக்சிஜன் டியூப் பொருத்தப்பட்டு, படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த கருப்பு பூஞ்சை நோய் வரும். ஐந்து அல்லது, 10 நாட்கள் ஆக்சிஜன் கொடுக்கப்படும்நோயாளிகளுக்கு வராது.


இஎஸ்.ஐ., மருத்துவமனையில் அட்மிட் ஆன, கொரோனா நோயாளிகள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. இறக்கவுமில்லை. அப்படியே பூஞ்சை தொற்று இருந்தாலும், அதற்கு மருந்து இருக்கிறது, அதை கொடுத்து சரி செய்து விடுவோம். ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு, இந்த பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. டாக்டர் நிர்மலா: டீன் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனை.அரசு மருத்துவமனையில், இதுவரை யாரும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படவில்லை.



சர்க்கரை நோயாளிகள் ஐசியூவில், அட்மிட் ஆகி நீண்ட நாட்கள் இருந்தால், இந்த பூஞ்சை தொற்று ஏற்படும். இப்போது கொரோனா நோயாளிகளுக்கு, அதிக நாட்கள் ஆக்சிஜன் கொடுப்பதில்லை.ஒரு வாரத்துக்குள் சரியாகி விடுகின்றனர். அதனால் இந்த பிரச்னை வருவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு, இந்த தொற்று வருகிறது.ஆகவே, அரசின் விதிமுறைகளை பின்பற்றி, கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



கண்களை கடுமையாக பாதிக்கும்


டாக்டர் சீனிவாசன், கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர், அகர்வால் கண் மருத்துவனைமியுகோர்மைகோசிஸ் என்ற இந்த பூஞ்சை, மூக்கு வழியாக உள்ள சென்று கண்ணுக்கு அருகில் உள்ள சைனஸ் பகுதியை, முதலில் தாக்கும். அதிலிருந்து வளர்ந்து கண்ணின் ஆர்பிட் பகுதியை தாக்கும். இதனால் கண்ணை சுற்றி உள்ள எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் பாதிக்கும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கண் சிவந்து, விழிகள் வெளியே தள்ள துவங்கிவிடும். பார்வை முழுமையாக போய் விடும்.


ஆர்பிட் பகுதியில் பாதிக்கப்பட்ட எலும்புடன் சேர்த்து, கண்ணையும் முழுமையாக அறுவை சிக்கிச்சை செய்து நீக்க வேண்டிய நிலை உருவாகும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து விட்டால், மருந்தில் சரி செய்து விடலாம். கொரோனாவில் பாதிக்கப்பட்ட எல்லோரையும், இந்த பூஞ்சை பாதிக்காது. அதனால் கொரோனா நோயாளிகள் பயப்பட தேவையில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X