கூடுதல் தனிமைபடுத்தப்பட்ட முகாம்கள் தயார்! மாவட்ட நிர்வாகம் தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
00:55

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கொரோனா பரவல் தீவிரமடையும் நிலையில், நோயாளிகளை தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க 860 படுக்கைகளுடன் கூடுதல் தனிமைபடுத்தப்பட்ட முகாம் தயார் செய்யப்பட்டுள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கபட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகள், சிறுவங்கூர் மருத்துவக் கல்லுாரியில் 200 படுக்கைகள் என 450 படுக்கைகள் உள்ளது. இதில், 330 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மொத்தம் 326 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கொரோனா நோயாளிகளை மூன்று வகையாக பிரித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைக்காக வருபவர்களுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், சர்க்கரை, இரத்த கொதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட இணை நோய்களுடன் இருப்பவர்களை கண்காணிக்க மாவட்டத்தில், 620 படுக்கைகளுடன் கொரோனா கேர் சென்டரும், குறைந்த சதவீத பாதிப்புடன் வருபவர்களுக்காக, 120 படுக்கைகளுடன் கூடிய கொரோனா ெஹல்த் கேர் சென்டரும் அமைக்கப்பட்டுள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், நாள் தோறும் சராசரியாக 150க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் குறைந்தளவு படுக்கை, ஆக்ஸிஜன் வசதி மட்டுமே இருப்பதால், கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.



இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி விடுதி உணவகத்தில் 500 படுக்கைகள், மற்றொரு கட்டடத்தில் 9 அறைகளில் 360 படுக்கைகள் என மொத்தம் 860 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் தனிமைபடுத்துதல் முகாம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், தற்காலிக ஆக்ஸிஜன் சிலிண்டர் உருளைகள் மூலம் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.



இந்த முகாமினை கலெக்டர் கிரண்குராலா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு தேவையான காற்றோட்டம், கழிப்பறை வசதி ஆகியவற்றை பார்வையிட்டார். நோயாளிகளை கட்டடத்திற்குள் கொண்டு செல்ல சாய்தளம் அமைக்குமாறு அறிவுறுத்தினார். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், இம்முகாம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.



ஆய்வின் போது, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், நோடல் அலுவலர் சிவக்குமார், தாசில்தார் பிரபாகரன், நகராட்சி மருத்துவ அலுவலர் பங்கஜம் உட்பட பலர் உடனிருந்தனர்.



ஆக்ஸிஜன் சிலிண்டர் அமைப்பு:



கொரோனாவால் பாதித்து மூச்சுத்திணறல் பிரச்னையுடன் உள்ளவர்களுக்காக, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய ஆக்ஸிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 3 நாட்களுக்கு ஒரு முறை ஆக்ஸிஜன் நிரப்பப்படுகிறது. இதுதவிர 300 சிலிண்டர் உருளைகள் உள்ளன. மாவட்டத்தில், கோவாக்சின் 1,020 டோஸ்களும், கோவிஷீல்டு 3 ஆயிரம் டோஸ்களும், ரெம்டெசிவர் 200 டோஸ்களும் (நேற்று முன்தினம் நிலவரப்படி) கையிருப்பில் உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X