கஞ்சா விற்ற வாலிபர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 மே
2021
01:08

சிங்காநல்லுார் போலீசார் நேற்று முன்தினம், தங்கள் எல்லைக்குட்பட்ட நந்தா நகரில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார், 21 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மது விற்றவர்கள் கைதுமுழு ஊரடங்கு காரணமாக 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடுக்க, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். இதில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X