கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு! உச்சத்தை தடுக்க அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
05:35

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் பாதிப்போர் மற்றும் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் வரை 22,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 20,162 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மாவட்டத்தில் கடந்த ஆண்டு, டில்லி இ தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்த நபர்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டதால், பாதிப்பு வெகுவாக குறைந்தது.



இதனால், கடந்த 2020ம் ஆண்டு டிச., வரை 14,996 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 110 பேர் மட்டுமே சிகிச்சை பலனின்றி இறந்தனர்.இதை தொடர்ந்து கடந்த ஜன.,-பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் நாளொன்றிற்கு 15, 9, 12, 11, 8, 3, 2, 1 என்ற நிலையில் பாதிப்பு இருந்தது. ஜனவரி மாதத்தில் இருவரும், பிப்ரவரி மாதத்தில் ஒருவரும் இறந்தனர்.



மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு 85,972 பேருக்கும், கோவாக்சின் 6,346 பேருக்கும் என 92,318 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதை தவிர்த்து 10,880 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருந்து கையிருப்பில் உள்ளது. மேலும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக 24 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளால், நோய் தொற்றின் அச்சத்தில் இருந்து பொதுமக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர்.அரசு அறிவித்த சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டினர். இதனால், கடந்த ஏப்., மாதத்தில் நாளொன்றிற்கு 45, 81, 65, 106, 129, 146, 377, என பாதிப்பு அதிகரித்தது. மேலும், ஏப்., மாதத்தில் மட்டும் 10 பேர் இறந்தனர்.



இதனால், மாவட்டத்தில் ஏப்., வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக இருந்தது. இதை தொடர்ந்து, இம்மாதத்தில் 412, 466, 521 என பாதிப்பு ஏற்பட்டதில், நேற்று முன்தினம் வரை 22 பேர் இறந்துள்ளனர். இதனால், இறப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால், கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 7,813 பேர் புதிதா கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மாவட்டத்தில் நாளொன்றிற்கு இரண்டு முதல் 5 பேர் வரை இறக்கும் சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.



மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையின்றி சாலையில் சுற்றுவோர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X