அதிர்ச்சி! கொரோனாவுக்கு மதுரையில் 3 டாக்டர்கள் பலி.... நிவாரணம் விரைந்து வழங்க சங்கம் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
05:52

மதுரை : மதுரையில் நேற்று கொரோனா தாக்குதலுக்கு இரண்டு டாக்டர்கள் பலியாகினர். இந்த வாரத்தில் கர்ப்பிணி, அரசு டாக்டர் உட்பட 3 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் பனைகுடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தோல்நோய் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் முகமது இஸ்மாயில் 62. இவர் கொரோனோ தாக்குதலுக்கு ஆளாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்தார்.மதுரையைச் சேர்ந்த பல்நோய் டாக்டர் இளங்கோவன் 62. இவர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இறந்தார்.



மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராக பணியாற்றிய 8 மாத கர்ப்பிணி சண்முகப்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் இறந்தார்.அடுத்தடுத்து டாக்டர்கள் பலியாவது சக டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறியதாவது: டாக்டர்கள் இறக்க நேர்ந்தால் மாநில அரசின் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ரூ.25 லட்சம், மத்திய அரசின் காப்பீடு மூலம் ரூ.50 லட்சம் வழங்கப்படும்.



மாநில அரசு நிதியை ஒரு மாத காலத்திற்குள்ளும் காப்பீட்டு நிதியை முடிந்தளவு சீக்கிரமாகவும் வழங்க வேண்டும். ஏற்கனவே இழப்பால் வாடும் குடும்பத்தினர் பணத்திற்காக சிரமப்படக்கூடாது. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை என ஏற்கனவே கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-மே-202107:23:37 IST Report Abuse
ஆப்பு பொது மக்கள் செத்தால் பொணம் ஆத்துல மிதக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X