செங்கல்பட்டில் வாலிபர் கொலை வழக்கு; 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செங்கல்பட்டில் வாலிபர் கொலை வழக்கு; 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 மே
2021
06:02

திண்டிவனம் : செங்கல்பட்டு அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் நேற்று திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்தனர்..



செங்கல்பட்டு மாவட்டம், காவனுாரை சேர்ந்தவர் வீரா,28; மறைமலை நகரில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி, பைக்கில் வீராவை, பொத்தேரி அருகே அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. மறைமறை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீரா வேலை செய்யும் காஸ் ஏஜென்சியின் மேலாளரான, மறைமலை நகரைச் சேர்ந்த சுகுமார்,33; என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. அதன் காரணமாக சுகுமார் தனது கூட்டாளிகளை வைத்து வீராவை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார், தலைமறைவான சுகுமார் உள்ளிட்டோரை தேடிவந்தனர்.



இந்நிலையில், மறைமலை நகர் சுகுமார், புதுச்சேரி சஞ்சீவி நகர் மணிகண்டன், 36; கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரம் தினகரன், 24; புதுச்சேரி, பூரணாங்குப்பம் செல்வமணி, 20; ஆகியோர் நேற்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல், சரண் அடைந்தனர். அவர்களை விசாரித்த மாஜிஸ்திரேட் தாயுமானவன், நான்கு பேரையும், சிறையில் அடைக்கவும், இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X