வாய் கிழிந்த எருமை மாடு வெடிகுண்டை கடித்ததா? | விருதுநகர் செய்திகள் | Dinamalar
வாய் கிழிந்த எருமை மாடு வெடிகுண்டை கடித்ததா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 மே
2021
00:11

ராஜபாளையம்:மேய்ச்சலுக்கு சென்ற எருமை, வாய் சிதைந்து திரும்பியதால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.



விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கலாராணி. இவர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கரடிப்பாறை அருகே தென்னந்தோப்பில், 10 பசு மாடுகள், ஒரு எருமை மாடு வளர்க்கிறார்.வழக்கம் போல், நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு, வாய் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் திரும்பியதை கண்டு கலாராணி அதிர்ச்சி அடைந்தார்.



வாயின் கீழ்பகுதி சிதைந்து தாடை, நாக்கு தனியாக தொங்குவதால், தண்ணீர் கூட அருந்த முடியாமல் மாடு அவதிப்படுகிறது.கிருஷ்ணாபுரம் கிராம கால்நடை மருத்துவர் சுந்தர்ராஜன் சிகிச்சை அளித்தார்.ஊரடங்கால் பலர், நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இவ்வாறு, பழத்துடன் சேர்த்து வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்ததால், மாட்டிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X