போதையில் விபத்து :டிரைவர் 'சஸ்பெண்ட்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போதையில் விபத்து :டிரைவர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 மே
2021
21:51

வால்பாறை:வால்பாறையில், குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய டான்டீ டிரைவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா டான்டீ தோட்டம். கடந்த, 10ம் தேதி ரயான் டிவிஷனில் இருந்து, தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை, ஏற்றி வந்த டிராக்டர் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்து குறித்து, டான்டீ மேலாளர் விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் சந்திரசேகர், 58, தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X