4 தாலுகாக்களில் 147 பேருக்கு தொற்று உறுதி: கோர்ட் ஊழியர் உட்பட மூவர் உயிரிழப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
22:22

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, நான்கு தாலுகாக்களில், 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூன்று பேர் உயிரிழந்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மகாலிங்கபுரம், திலகர் வீதி, கே.வி.ஆர்., நகர், வெப்ஜியார் வேலி, ஆறுமுகம் லே - அவுட், டி.கோட்டாம்பட்டி, மரப்பேட்டை வீதி, சக்தி விநாயகர் கோவில் வீதி, நாச்சிமுத்து வீதி, வெங்கடேசா காலனி அழகப்பா லே - அவுட், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பராம்பாளையம், கோமங்கலம்புதுாரில் தலா இரண்டு பேருக்கும், சமத்துார், சூளேஸ்வரன்பட்டியில், தலா ஆறு பேருக்கும், ஜமீன் ஊத்துக்குளியில், ஐந்து பேருக்கும், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டியில், தலா மூன்று பேருக்கும்; கெடிமேட்டில் நான்கு பேருக்கும், கஞ்சம்பட்டி, சிஞ்சுவாடி, தொழிற்பேட்டை, ரங்கசமுத்திரம், கே. நாகூர், மோதிராபுரத்தில் தலா ஒருவருக்கும், என, மொத்தம், 37 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனிக்கம்பட்டி, போடிபாளையத்தில் தலா, மூன்று பேருக்கும்; ராசக்காபாளையத்தில், இரண்டு பேருக்கும், கொண்டேகவுண்டன்பாளையம், நெகமம், வடக்கிப்பாளையம், ஆச்சிப்பட்டி, பூசாரிப்பட்டி, புளியம்பட்டி மற்றும் ஆ.சங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தலா ஒருவர், என, மொத்தம், 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவுகொண்டம்பட்டி, வடசித்துார், காணியாலம்பாளையம், தேவணாம்பாளையம் மற்றும் கோவில்பாளையம் கிராமங்களில், 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நல்லட்டிபாளையம், வடசித்துார் பகுதியில் நடந்த பரிசோதனை முகாமில், 215 சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.மேலும், நல்லட்டிபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைத்தில், 152 பேருக்கும், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 39 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.ஆனைமலைஆனைமலை ஒன்றிய பகுதிகளில் நேற்று மாலை நிலவரப்படி, 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் அதிகம் பேருக்கு தொற்று உறுதியானது. மணக்கடவு, சோந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான பாதிப்புகள் பதிவாகின. கொரோனா பாதித்தவர்களுடன் இருந்தவர்களுக்கு, தொற்று அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வால்பாறைவால்பாறை அடுத்துள்ள, வேவர்லி எஸ்டேட்டில், 47 வயதான ஒருவருக்கும், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், 25 வயதான ஒருவர், என, இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.வால்பாறை துளசிங்க நகரை சேர்ந்த, 73 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோர்ட் ஊழியர் பலிபொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில், இளநிலை கட்டளை பணியாளராக பணியாற்றியவர் நவ்ஷாத், 45. உடல்நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பொள்ளாச்சி பள்ளி வாசல் தெரு முகமது நகரை சேர்ந்த, 40வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில், 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X