காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண் : குடும்பத்திற்கு ரூ. 4- லட்சம் நிதி உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
22:43

பந்தலுார்:பந்தலுார் அருகே, யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, 4- லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே, பாண்டியர் டான்டீ பகுதியில், காட்டு யானை தாக்கி பூங்கொடி-,54, என்பவர் உயிரிழந்தார். அவர், உடல் பிரேத பரிசோதனைக்காக, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.யானை- மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காண, நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, டி.எஸ்.பி., அமீர்அகமது, டான்டீ பொது மேலாளர் சசாங்சியாப்,கோட்ட மேலாளர் ஸ்ரீதரன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில், 'உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக, 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்; சம்பவம் நடந்த பகுதியில் வனத்துறை மூலம் சோலார் மின்வேலி அமைப்பதுடன், நெல்லியாளம் நகராட்சி மூலம் உடனடியாக தெருவிளக்குகள் பொருத்தப்படும்; உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்; யானைகளை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, பூங்கொடி குடும்பத்தினரிடம், 4- லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.தொழிலாளர்கள் போராட்டம்...கூடலுார் பாண்டியர் டான்டீயில், யானை தாக்கி பெண் தொழிலாளி பலியானதை தொடர்ந்து,நேற்று காலை, பாண்டியார் டான்டீ தொழிலாளர்கள், பணிக்கு செல்லாமல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 'வனவிலங்கு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வேண்டும்,' என, வலியுறுத்தினர்.கோட்ட மேலாளர் ஸ்ரீதரன், தொழிலாளர் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். அதை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X