பைக் மீது வேன் மோதல்: 2 வாலிபர் பரிதாப பலி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பைக் மீது வேன் மோதல்: 2 வாலிபர் பரிதாப பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 மே
2021
23:01

பொங்கலுார்:பொங்கலுார் அருகே பைக் மீது வேன் மோதியதில், இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.மதுரையை சேர்ந்த முத்து மகன் சுரேஷ், 24, செல்வம் மகன் முத்துராஜ், 28, சின்னபாண்டி, 30, நெல்லையை சேர்ந்த திருமலை மகன் அசோக்குமார், 23 ஆகியோர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.சொந்த ஊர் செல்வதற்காக, திருப்பூரில் இருந்து, இரண்டு பைக்கில், சுரேஷ், அசோக்குமார், முத்துராஜூ மற்றும் சின்னபாண்டி சென்றனர். நேற்று காலை, 6:30 மணிக்கு, பொங்கலுார் - துத்தாரிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, தேனியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், பைக் மீது மோதியதில், சுரேஷ், அசோக்குமார் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.மற்றொரு பைக் மீதும் வேன் மோதியது. இதில், பைக்கில் வந்த முத்துராஜ், சின்னபாண்டி, வேன் டிரைவர் கரூரை சேர்ந்த ராஜ்குமார், 30 ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X