1,150 படுக்கை வசதியுடன் கூடுதல் மையம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
23:01

திருப்பூர்:தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒன்பது இடங்களில், 1,150 படுக்கைகளுடன், கொரோனா மையம் அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், தினமும், 500க்கும் மேற்பட்டவருக்கு தொற்று பரவுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறுகின்றனர்.மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், 773 படுக்கை வசதியும், தனியாரிடம், 1,144 படுக்கை வசதியும் உள்ளன. இவற்றில், 40 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஏழு இடங்களில், 1,000 படுக்கைகளுடன், கொரோனா கண்காணிப்பு மையம் பயன்பாட்டில் உள்ளது.அவற்றில், சாதாரண பாதிப்புக்கு உள்ளான, 500க்கும் அதிகமானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மேலும், 1,150 படுக்கைகளுடன், கூடுதல் கொரோனா மையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது.உடுமலை அரசு கல்லுாரி, அவிநாசி மகாராஜா கல்லுாரி, திருப்பூர் சேவா சமிதி, சிக்கண்ணா கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி, ஜெய்வாபாய் பள்ளி, குமரன் கல்லுாரிகளில், கொரோனா மையம் இயங்கி வருகிறது.முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லுாரியில், 250 படுக்கை, தாராபுரம் ஐ.ஐ.டி.,யில் 19, அவிநாசி ஐ.கே.எப்., கண்காட்சி மையத்தில், 200 என, 469 படுக்கை வசதி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.திருப்பூர் குலாலர் திருமண மண்டபம் - 25, பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி - 100, பெண்கள் பள்ளி - 100, பல்லடம் அரசு கல்லுாரி -150, தாராபுரம் ஏஞ்சல் கல்லுாரி - 250, தாராபுரம் மகாராணி நர்ஸிங் கல்லுாரி - 65 என, 690 படுக்கை வசதியுடன் கூடிய மையங்கள், இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், 1,150 படுக்கைகளுடன், கூடுதல் கொரோனா மையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது.'ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை'கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; தட்டுப்பாடு வராமல் இருக்க, சிலிண்டர்கள் வரவழைக்கப்படுகின்றன.அறிகுறி தென்பட்டவுடன், முழு பரிசோதனை செய்து, சிகிச்சை எடுக்க வேண்டும்; அஜாக்கிரதையாக இருந்தால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பொதுமக்கள், ஊரடங்கை முழுமையாக பின்பற்றி, அவரவர் வீடுகளில் இருந்தாலே தொற்று பரவலை தடுக்க முடியும்' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X