இணைந்த கைகள்! கொரோனா தடுக்க தி.மு.க., - அ.தி.மு.க.,:கோவையின் நலனுக்கு ஒத்துழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 மே
2021
04:46
பதிவு செய்த நாள்
மே 13,2021 23:32

கோவை:கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இணைந்து களம் இறங்கியுள்ளது, அதிகாரிகள், தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக, கோவை உள்ளது. இங்கு நோய் தொற்றை குறைக்கும் நோக்கத்துடன், அரசு சார்பில் ஆலோசனை கூட்டம், கோவை கோ இண்டியா அரங்கில் நேற்று நடந்தது.


இதில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் இருவரும் பங்கேற்றனர். அவர்கள் வருவதற்கு முன்னதாகவே, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் வந்து விட்டனர்.அனைவரும், அமைச்சர்கள் வருகைக்காக காத்திருந்தனர். சற்று நேரத்தில் அமைச்சர்கள் இருவரும் வந்ததும், அனைவரும் அரங்கினுள் சென்றனர். முதலில் மேடைக்கு சென்ற அமைச்சர் சக்கரபாணி, 'அ.தி.மு.க.,வினரை கைகாட்டி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் மேடையில் அமர வையுங்கள்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, எம்.எல்.ஏ,.க்கள் அனைவரும் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.



அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன், கலெக்டர் நாகராஜன், எம்.பி., நடராஜன், மாநகராட்சி ஆணையர் குமார வேல் பாண்டியன் ஆகியோருடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.அவரும், அரசியல் ரீதியாக எதுவும் பேசாமல், தன் தொகுதியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இடங்கள், தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இடங்கள், மாவட்டத்தில் கூடுதலாக செய்ய வேண்டிய வசதிகள் பற்றி பேசினார்.முன்னாள் அமைச்சர் வேலுமணியும், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.


ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் பற்றாக்குறை, கூடுதல் சிகிச்சை மையங்கள் ஏற்பாடு என, ஆலோசனைகளை மட்டும் வழங்கினார்.சட்டசபை உறுப்பினர்கள் என்ற முறையில், தங்களது ஒத்துழைப்பு 100 சதவீதம் கிடைக்கும் என்றும், மேடையில் வேலுமணி உறுதியளித்தார். பேசி முடித்தபின், தங்கள் கோரிக்கை அடங்கிய மனுக்களையும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களிடம் வழங்கினர்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் இருவருமே, அ.தி.மு.க.,வினருக்கு உரிய மரியாதை அளித்துப் பேசினர்.ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், ஒருவரை ஒருவர் குற்றம் கூறாமல், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, நாகரிகத்துடன் நடந்து கொண்டது, பாராட்டும்படியாக இருந்தது.


நிகழ்ச்சியில் பேசிய, கோவை எம்.பி., நடராஜனும் இதை குறிப்பிட்டு, இரு தரப்பினரையும் பாராட்டினார்.அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தாலும், மக்கள் நலன் காக்கும் பணியில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது, அதிகாரிகள், தொழில் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
15-மே-202100:40:21 IST Report Abuse
Ram நண்பேன்டா
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
15-மே-202100:39:45 IST Report Abuse
Ram NA
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
14-மே-202121:01:46 IST Report Abuse
naadodi நல்ல மாற்றம். இது தொடர்ந்தால் ஸ்டாலின் தலைப்பு பண்பும் உயரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X