திருச்சி ரோடு பாலம் பணி முடிப்பதில் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2021
23:37

கோவை;கோவை, திருச்சி ரோடு பாலத்தில், சுங்கம் சந்திப்பில் இறங்கு தளம் அமைக்கும் வேலையை, தேசிய நெடுஞ்சாலைத்துறை துரிதப்படுத்தியுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காமல், குடிசை மாற்று வாரியம் இழுத்தடித்து வருகிறது.கோவை - திருச்சி ரோட்டில், ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரை, 3.5 கி.மீ., துாரத்துக்கு ரூ.253 கோடியில், நான்கு வழி மேம்பாலம் கட்டும் பணி, கடந்த, 2019ம் ஆண்டு, மார்ச், 7ல் துவக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் இருந்து வருவோர், உக்கடம் செல்ல, சுங்கம் சந்திப்பில், வாலாங்குளம் பைபாஸில் இறங்கும் வகையில், இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக் கொடுக்க, மாநகராட்சியிடம், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோரியது. மாற்று இடம் வழங்க, குடிசை மாற்று வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.முதல்கட்டமாக, 32 வீடுகள் அகற்றப்பட்டதால், துாண்கள் கட்டப்பட்டு, ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும், 52 வீடுகளுக்கு மாற்று வீடு வழங்கி விட்டு, இடித்துத்தந்தால் மட்டுமே, இறங்கு தளம் அமைக்க முடியும். இல்லையெனில், பாலம் அந்தரத்தில் நிற்கும்.தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, 'மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இரு துறையினரும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி, ஓராண்டாக இழுத்துக் கொண்டிருக்கின்றனர். கலெக்டரிடமும் முறையிட்டுள்ளோம். துறை அலுவலர்களிடம் அறிவுறுத்துவதாக கூறியிருக்கிறார்.தற்போதுள்ள சூழலில், பாலம் பணி முழுமையாக முடிய, செப்., மாதமாகி விடும். கட்டுமான பணி முடிந்ததும் காந்திபுரம் பாலம் போல் பெயின்ட் பூசப்படும். என்ன கலர் என்பது இன்னும் முடிவாக வில்லை' என்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கொரோனா பரவல் தடுப்பு பணியில், பிஸியாக இருக்கிறோம். சுங்கம் பகுதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் இன்னும் மாற்று வீடு வழங்கவில்லை. அத்துறை அதிகாரிகளிடம் கேளுங்கள்' என்றனர்.குடிசை மாற்று வாரியத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X