கள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' மருந்து ரூ.2 லட்சத்திற்கு விற்பனை; மதுரை போலீசார் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
02:48

மதுரை : மதுரையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான 'ரெம்டெசிவிர்' 6 குப்பிகளை கொண்ட மருந்து பெட்டகம் ரூ.2 லட்சத்திற்கு விற்கப்பட்டது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளில் ஒன்றான 'ரெம்டெசிவிர்' உயிரை காக்கும் என்ற நம்பிக்கையில் அதை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை அறிந்த தமிழக அரசு, குறைந்த விலையில் அனைத்து மாவட்டங்களிலும் விற்க ஆரம்பித்துள்ளது.ஒரு குப்பியின் விலை ரூ.1568. ஆதார், சிடி ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட நோயாளிகளின் ஆவணங்களை காண்பித்து இம்மருந்தை பெற வேண்டும்.



சிலர் இறந்த நோயாளிகளின் ஆவணங்களை காண்பித்து மருந்து வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.மதுரையில் நேற்று முன்தினம் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற புதுவிளாங்குடி இம்ரான்கான் 26, கைது செய்யப்பட்டார். லேப் டெக்னீசியனான இவர், தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரது நண்பர் வெங்கடேஷ் மூலம் நோயாளிகளின் உறவினர்களை அணுகி ஒரு குப்பி ரூ.28 ஆயிரத்திற்கு விற்று வந்துள்ளார்.



'எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்' என சொன்னவர்களிடம் 6 குப்பிகளை ரூ.2 லட்சத்திற்கு விற்றது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மதுரை மட்டுமல்லாது சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இறந்தவர்களின் ஆவணங்களை அனுப்பி நண்பர்கள் மூலம் 'ரெம்டெசிவிர்' மருந்து வாங்கி விற்றாரா எனவும் விசாரணை நடக்கிறது.



இதற்காக நண்பர்களுக்கு ஒரு குப்பிக்கு ரூ.2 ஆயிரம் கமிஷன் தந்துள்ளார். இம்ரான்கான் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X