ஏற்பாடு: கொரோனா நோயாளிகளுக்காக தனியார் வாகனங்கள்...தொற்று அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:47

கடலுார்; கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லாததால், தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது



.தமிழகம் முழுதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உயிரைக் காப்பதில் அதிகமாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு சென்னையில், 'கோவிட்' மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி என தற்காலிகமாக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள் தோறும் 500க்கு குறையாமல் உள்ளது. நேற்று முன்தினம் வரை 35,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 377 பேர் இறந்துள்ளனர்.இதை கருத்தில் கொண்டு கடலுார் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரியில் ஆக்சிஜன் படுக்கை வசதியை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலுார் அரசு மருத்துவமனையில் 184 ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ள நிலையில், அதனை 300ஆக உயர்த்தவும், சிதம்பரத்தில் 280 ஆக உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியை 540 ஆகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு 3,567 பேர் தங்கும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், 1200 பேர் தங்கியுள்ளனர். மொத்தம் 10,500 படுக்கை வசதியுடன் தனிமைப்படுத்தும் மையங்கள் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.



ஆனால், நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வசதி போதுமான அளவில் இல்லை.மாவட்டத்தில் அவசர மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் 51 உள்ளன.அதில், கடந்தாண்டு கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் 25 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதித்தோரை மருத்துவமனைக்கு அழைத்து வருதல் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கு போதுமான அளவில் ஆம்புலன்ஸ்கள் இல்லை.அதனைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், என்.எல்.சி., ஆகியவற்றில் இருந்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும், பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், தனியார் ஆம்புலன்ஸ்களையும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.அதற்காக, மாவட்டம் முழுதும் தனியார் ஆம்புலன்ஸ் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடலுார் மாவட்டத்திலும் 'கோவிட்' மருத்துவ சிறப்பு அவசர ஊர்தியை அறிமுகப்படுத்தினால் பிரச்னையை சாமாளிக்க முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X