கொரோனா தொடர்பான புகார்களுக்கு மாவட்டத்தில் 21 கட்டுப்பாட்டு மையங்கள் | கடலூர் செய்திகள் | Dinamalar
கொரோனா தொடர்பான புகார்களுக்கு மாவட்டத்தில் 21 கட்டுப்பாட்டு மையங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:47

கடலுார்; கொரோனா தொடர்பான புகார்களை அளிக்க மாவட்டத்தில் 21 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கலெக்டர் சந்திரசேகர சகாமுரி செய்திக்குறிப்புகடலுார் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனால் பொதுமக்கள் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை எளிதில் பெறவும், சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும் மாவட்டம் முழுதும் 21 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அந்த கட்டுப்பாட்டு அறையை 04142- 1077, 04142 - 220700 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். மேலும் வைரஸ் பரவல் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.இதேபோன்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் கடலுார் 295134, 230286, அண்ணாகிராமம் 277238, பண்ருட்டி 242094, குறிஞ்சிப்பாடி 258655, காட்டுமன்னார்கோவில் 262029, குமராட்சி 251224, கீரப்பாளையம் 241354, புவனகிரி 241238, பரங்கிப்பேட்டை 243227, விருத்தாசலம் 238217, கம்மாபுரம் 267243, நல்லுார் 249243, மங்களூர் 248244, கடலுார் நகராட்சி 220679, நெல்லிக்குப்பம் நகராட்சி 272397, பண்ருட்டி நகராட்சி 242110, சிதம்பரம் நகராட்சி 222231, விருத்தாசலம் நகராட்சி 230240, நெய்வேலி பொது மருத்துவமனை 252664 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கட்டுப்பாட்டு மையங்களில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள்.இந்த மையங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கொரோனா தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதனால் பொதுமக்கள் கொரோனா தொடர்பான புகார்களை தெரிவிப்பதுடன், தேவையான விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X