அரசு மருத்துவமனையில் தீயணைப்பு வாகனம் | கடலூர் செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவமனையில் தீயணைப்பு வாகனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:47

கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வடமாநில மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதால் கொரோனா நோயாளிகள் இறந்தனர்.கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.அதன்படி தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X