ஊரடங்கை தீவிரப்படுத்த அமலாக்க குழுக்கள் அமைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
ஊரடங்கை தீவிரப்படுத்த அமலாக்க குழுக்கள் அமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:09

சென்னை,-சென்னையில், அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், ஊரடங்கை நடைமுறைப்படுத்த, மண்டலத்திற்கு ஒரு குழு என, 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இவர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர், நேற்று ஆலோசனை வழங்கினர்.ஊரடங்கு அமலாக்க குழுவினர், தங்கள் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



அரசின் வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை மூடி, 'சீல்' வைக்க வேண்டும்; முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடமிருந்து, அபராதம் வசூலிக்க வேண்டும் என, கமிஷனர்கள் அறிவுறுத்தினர்.மேலும், மண்டல அமலாக்க குழுவும், கூடுதலாக ஒரு குழு நியமிக்கப்படுகிறது. இனி வரும் நாட்களில், மண்டலத்திற்கு இரண்டு அமலாக்க குழு, ரோந்து பணியில் ஈடுபடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X