வெளியே நெகட்டிவ்... உள்ளே பாசிட்டிவ்! ' நெகட்டிவ்' நபரிடமும் தொற்று...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 மே
2021
10:05
பதிவு செய்த நாள்
மே 15,2021 01:02

கோவை:இரண்டாம் கொரோனா அலையில் பலருக்கு நடத்திய சளி பரிசோதனையில், 'நெகட்டிவ்' என காண்பிக்கும் முடிவுகள், சிடி ஸ்கேன் பரிசோதனையில் 'பாசிட்டிவ்' என காட்டுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்நபர்களால் பிறருக்கு தொற்று பரவும் என்பதால், வெளியே செல்லாமல் வீட்டினுள் இருப்பதே, இப்போதைக்கு பாதுகாப்பு.



தடுப்பூசி, பரிசோதனை மையங்களில் போலீசாரை நியமித்து, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை, உறுதி செய்தாக வேண்டும்.கொரோனா தொற்று கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தினசரி பல ஆயிரம் மக்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இப்போது ரெம்டெசிவீர் மருந்து வாங்கவும், கூட்டம் கூடுகிறது. பரிசோதனைக்காக வரும் மக்கள் பலர், இன்னும் முக கவசத்தை முறையாக அணியாமல் இருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது கிடையாது.



இரண்டாம் அலையில், யாரிடம் தொற்று இருக்கும் என்று, யாருக்கும் தெரியாது. பலருக்கு பரிசோதனையில் 'நெகட்டிவ்' என முடிவு வந்தாலும், சிடி ஸ்கேனில் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிடி ஸ்கேன் எடுக்காதவர்கள், தங்களுக்கு தொற்று இல்லை என கருதி, தடுப்பூசி போடும் இடங்கள், பரிசோதனை முகாம்களுக்கு வரக்கூடும். ஆகவே, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டபுள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.போலீசாரை நியமிக்க வேண்டும் பரிசோதனை மையங்கள், தடுப்பூசி மையங்களில், பணியாற்றும் ஊழியர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. அறிவுறுத்தினாலும் எவரும் கேட்க தயாரில்லை. ஆகவே, இம்மையங்களில் போலீசாரை பணியமர்த்தி, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்ற, கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.



மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், முந்தைய தினமே முகாம் நடக்கும் இடம், நேரம் குறித்து, மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இப்படி, ஒவ்வொரு விஷயத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை ஒரேடியாக ஒழிக்க முடியும்.



இரட்டை மாஸ்க் அணிவது எப்படி?



* அரசின் தளர்வுகளை பயன்படுத்தி, பொது இடங்களுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க வேண்டும்.

* அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் போது, கண்டிப்பாக இரட்டை முககவசம் அணிய வேண்டும்.

* அதில் ஒன்று சாதாரண மாஸ்க்கும், மற்றொன்று ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகவும் இருக்க வேண்டும்.சர்ஜிக்கல் மாஸ்க்கை உள்ளேயும், சாதாரண மாஸ்க்கை வெளியேயும் அணிய வேண்டும்.

* இரண்டு சர்ஜிக்கல் மாஸ்க்கோ, இரண்டு துணியால் ஆன மாஸ்க்கோ அணிய கூடாது; அது, சரியான பிட்டிங் அளிக்காததால், பாதுகாப்பு உத்தரவாதமல்ல என்கின்றனர், தொற்று நோயியல் நிபுணர்கள்.

* குறிப்பாக, வங்கி மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க முடியாதவர்கள், இந்த டபுள் மாஸ்க் நடைமுறையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். சர்வதேச அளவில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில், டபுள் மாஸ்க் அணிவதே பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது.

* என் 95 மாஸ்க் அணிபவர்கள், டபுள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை.



தொற்று அதிகரிப்பது இப்படித்தான்!




மாநகராட்சி மருத்துவர் தினேஷ் பெரியசாமி கூறியதாவது:அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளது. டெஸ்ட் எடுத்து, நெகடிவ் என வந்தவர்களுக்கும் சிடி ஸ்கேனில் பாசிட்டிவ் என இருக்கிறது. பயத்தில் டெஸ்ட் எடுக்காமல், பலர் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மூலம்தான் அதிகம் தொற்று பரவுகிறது.டெஸ்ட் முடிவுகள் வர, மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது. அதுவரை வெளியில் சுற்றுகின்றனர். இவர்கள் மூலம் பலருக்கு தொற்று பரவி விடுகிறது. இதை தடுக்க, சளி, காய்ச்சல் என, யார் வந்தாலும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். டெஸ்ட் ரிசல்ட்டை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202106:08:31 IST Report Abuse
ஆப்பு அமைச்சர்கள் ஆய்வு செய்யுறேன்னு வெளியே போகலாம். போலூஸ் ஊரடங்கை அமல் படுத்துறேன்னு வெளியே சுற்றலாம். மக்கள் தங்கள் விஷயமா வெளியே போனா தேவையில்லாம ஊர்சுத்துறாங்கன்னு அடிச்சு முடக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X