'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை முறைகேடு தடுக்க புதிய யோசனை | மதுரை செய்திகள் | Dinamalar
'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை முறைகேடு தடுக்க புதிய யோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
01:29

மதுரை:'கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க, 'ரெம்டெசிவிர்' மருந்தை, பொதுமக்களிடம் விற்பனை செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்' என, டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட ஏழு இடங்களில், கொரோனா சிகிச்சைக்கான, 'ரெம்டெசிவிர்' மருந்துகள் விற்கப்படுகின்றன. மதுரையில், மருத்துவக் கல்லுாரியில் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை கழகம் மருந்துகளை விற்கிறது.



மருத்துவமனை ஊழியரும், சேவை கழக கிளர்க்கும் தான் மருந்து விற்பனையை முடிவு செய்கின்றனர். ஒரு சில இடங்களில், ஒரே மருந்து சீட்டை நகல் எடுத்து, தினந்தோறும் வாங்கிச் செல்லும் அவலமும் நடக்கிறது.ஆதார் கார்டு நகல் மட்டும் போதும் என்பதால், நகல் எடுக்கும் கடைகளில் கிடைக்கும் ஆதார் கார்டுகளை வைத்தும், நோயாளியின் பெயரை மட்டும் மாற்றி எடுத்தும், மருந்துகளை சிலர் வாங்குகின்றனர்.



இவற்றை பல மடங்கு விலைக்கு, வெளியில் விற்பனை செய்கின்றனர். இதை ஒரு வியாபாரமாகவே செய்ய ஆரம்பித்து, வரிசையில் நிற்பதற்கு கூலிக்கு ஆட்களை வைக்கும் சம்பவமும் நடக்கிறது.



இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:பொதுமக்களிடம் மருந்து விற்பனை செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். உண்மையாகவே மருந்து தேவைப்படும் நோயாளிகளின் முழு சிகிச்சை விபரத்தையும் மருத்துவ சேவை கழகத்திற்கு, ஆன்லைனில் தனியார் மருத்துவ மனை அனுப்ப வேண்டும். நோயாளியிடம் பெற்ற கட்டணத்திற்கான ரசீதையும் அனுப்ப வேண்டும். வெறுமனே ஏமாற்றுவதற்காக கட்டண ரசீதுகளை தந்தால், வருமானவரி பிரச்னையில் சிக்க நேரிடும்.



எனவே, தனியார் டாக்டர்களும், உண்மையான நோயாளிகளுக்கு மட்டுமே மருந்தை பரிந்துரை செய்தால், அதை பரிசீலித்து, ஆன்லைனில் அனுமதி வழங்க வேண்டும். மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட கிளைகளில், அனுமதி ரசீதை காண்பித்து, தனியார் மருத்துவ மனைகள், மருந்துகளை பெற வேண்டும். இந்த முறையில், 90 சதவீத முறைகேடுகளை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X