துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? | மதுரை செய்திகள் | Dinamalar
துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
01:39

மதுரை:'கொரோனா பெருந்தொற்று காலத்தில், துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என தமிழக அரசை, தேசிய துாய்மை பணியாளர் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.



கமிஷன் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:இத்தொற்று பரவல் காலத்தில், தீவிரமாக பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக, 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை, அவர்கள் பொறுப்புக்கு ஏற்ப வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.



கொரோனா தடுப்பில், மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து பணிபுரியும் துாய்மை பணியாளர்களை, மாநில அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில், ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தடுப்பு பணியில், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பணியில் ஈடுபட்ட நிலையில், சிலர் இறந்துள்ளனர்.



இக்கால கட்டத்தில், துாய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் கூட கொடுக்கப்படாமல், பல மாவட்டங்களில் நிலுவை வைக்கப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்தால், 25 லட்சம் ரூபாயும் வழங்க, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X