ஆக்சிஜன் படுக்கைகளை இரட்டிப்பாக்க உத்தரவு! தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
04:50

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தற்போதுள்ள ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.



கடலுார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான, தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கடலுாரில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ரமேஷ் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி காம்ப்ளே, சுகாதாரத் துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், டி.ஆர்.ஓ., அருண் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவித்ததாவது:கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள், தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இருக்க வேண்டும்.கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.



தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையிலும் தற்போதுள்ள ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகளை இரட்டிப்பாக்க சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.மேலும், கொரோனா பாதிப்பு ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினர்.



மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 8 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைத்து துறையினரும் இணைந்து கடலுார் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கொண்டுவர பணி புரிய வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தினை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X