கண்களை தாக்கும் கொரோனா: அடிக்கடி கை கழுவணும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:44

மதுரை: 'சர்க்கரை நோயாளிகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் கொரோனாவால் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது,'' என, மதுரை

அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் உஷா கிம் கூறினார்.

அவர் கூறியதாவது: இம்மருத்துவமனைக்கு பூஞ்சை தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகம் வருகின்றனர். ஓராண்டில் வரும் நோயாளிகளின் எண்ணிகையைப் போல வாரந்தோறும் அதிகம் வருகின்றனர். ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது.

கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி அல்லது சிவந்து காணப்படுதல், முகத்தில் வலி, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி நிறம் மாறுதல், திடீர் பார்வையிழப்பு, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், மூக்கில் நீர் அல்லது ரத்தம் வடிதல் போன்றவை தொற்றின் அறிகுறிகள். கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் காது, தொண்டை, கழுத்து நிபுணர், கண் டாக்டர் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மூலம் குணப்படுத்தலாம். முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை

பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
15-மே-202118:51:53 IST Report Abuse
R chandar Governmernt should give free medical , education and social security of pension ofh Rs 10000 per montfor all citizen above 60 years and stop all freebies , and unwanted subsidies , to mobilize funds they should impose transaction tax on above 1 crore ,and put additional tax on fuel,alcohol,and other luxury items. Avoid availing GST input tax ,put standard tax tem and give them exemption in paying income tax on profits earned.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X