'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா | மதுரை செய்திகள் | Dinamalar
'108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:45

மதுரை: தமிழகத்தில் 'நிர்வாக காரணங்களுக்காக' எனக்கூறி பணிநீக்கப்பட்ட '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரையில் தமிழ்நாடு '108' அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் இருளாண்டி கூறியதாவது: கடந்தாண்டு நவ.,ல் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நடத்தினோம். இதில் பங்கேற்ற 10 பேர், பழிவாங்கும் நோக்கில் பணிநீக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் ஒப்பந்தத்தில் நடத்தப்படும் '108' ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம், என்றார். மாவட்ட

தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X