மதுரை: மதுரையில் கொரோனா தொற்றை கண்டறிய ஸ்கேன் மையங்களில் கூட்டம் அதிகளவில் கூடுவதால் பரவல் அதிகரிப்பதை தடுக்க நடமாடும் 'ஸ்கேன் சென்டர்' முகாம்களை நடத்த கலெக்டர் அன்பழகனிடம் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா முதல் அலையின் போது சென்னையில் நடமாடும் ஸ்கேன் முகாம்கள் நடந்தது. தற்போது 2 ம் அலை தீவிரமாக இருப்பதால் அறிகுறிகள் உள்ளவர்கள் ஸ்கேன் செய்ய வேண்டிஉள்ளது. மதுரையில் ஒரு ஸ்கேன் சென்டரில் ஒருவர் ஸ்கேன் செய்ய 5 மணி நேரம் காத்திருக்கிறார். இந்த நோயாளியால் ஸ்கேன் செய்ய வரும் மற்ற நோயாளிகள், உடன் வருவோருக்கு கொரோனா பரவ அதிக வாய்ப்பு உண்டு.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் நியாயமான கட்டணத்தில் நடமாடும் ஸ்கேன் முகாம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் கூறியதாவது: நடமாடும் ஸ்கேன் சென்டர் முகாம் குறித்து பரிசீலனை செய்வதாக கலெக்டர் கூறியுள்ளார். கொரோனா பரிசோதனை முகாம்கள், சித்த மருத்துவ பரிசோதனைகளை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டது, என்றார்.