மதுரை: மதுரை மாநகராட்சி கோச்சடையில் அதிகபட்சமாக 10 நாட்களில் 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலம் 1 ல் உள்ள கோச்சடையில் 244, பெத்தானியபுரம் 243, பொன்மேனி 206, எஸ்.எஸ்.காலனி 170, விசாலாட்சிபுரம் 159, சாந்திநகர் 138, ஆனையூர் 219, பீ.பி.குளம் 146, எஸ்.ஆலங்குளத்தில் 143 என, 1668 பேர் 10 நாட்களில் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.மண்டலம் 2 ல் திருப்பாலையில் 236, கடச்சனேந்தல் 234, மேலமடை 158, கே.கே.நகர் 144, சுந்தர்ராஜபுரம் 123, புதுார் 119, மஸ்தான்பட்டியில் 115 என 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 3 ல் சின்னஅனுப்பானடியில் 176, அவனியாபுரம் 134, மண்டலம் 4 ல் டி.வி.எஸ்., நகரில் 131, பழங்காநத்தத்தில் 159 பேருக்கு பாசிடிவ் உள்ளது.ஊரடங்கிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது பரவலுக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.