மாநகராட்சியின் கொரோனா 'ஸ்பாட்' ஆன கோச்சடை | மதுரை செய்திகள் | Dinamalar
மாநகராட்சியின் கொரோனா 'ஸ்பாட்' ஆன கோச்சடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:46

மதுரை: மதுரை மாநகராட்சி கோச்சடையில் அதிகபட்சமாக 10 நாட்களில் 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலம் 1 ல் உள்ள கோச்சடையில் 244, பெத்தானியபுரம் 243, பொன்மேனி 206, எஸ்.எஸ்.காலனி 170, விசாலாட்சிபுரம் 159, சாந்திநகர் 138, ஆனையூர் 219, பீ.பி.குளம் 146, எஸ்.ஆலங்குளத்தில் 143 என, 1668 பேர் 10 நாட்களில் புதிதாக

தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மண்டலம் 2 ல் திருப்பாலையில் 236, கடச்சனேந்தல் 234, மேலமடை 158, கே.கே.நகர் 144, சுந்தர்ராஜபுரம் 123, புதுார் 119, மஸ்தான்பட்டியில் 115 என 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 3 ல் சின்னஅனுப்பானடியில் 176, அவனியாபுரம் 134, மண்டலம் 4 ல் டி.வி.எஸ்., நகரில் 131, பழங்காநத்தத்தில் 159 பேருக்கு பாசிடிவ் உள்ளது.

ஊரடங்கிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது பரவலுக்கு

காரணம் என்கின்றனர்

அதிகாரிகள்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X