49 நாட்களில் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்ட தென்மண்டல ஏ.டி.ஜி.பி., | மதுரை செய்திகள் | Dinamalar
49 நாட்களில் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்ட தென்மண்டல ஏ.டி.ஜி.பி.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:47

மதுரை: தென்மண்டல ஏ.டி.ஜி.பி., ஆபாஷ்குமார் பொறுப்பேற்ற 49 நாட்களில் மீண்டும் பழைய இடத்திற்கே (பொருளாதார குற்றப் பிரிவு) இடமாற்றப்பட்டார்.

தென்மண்டல ஐ.ஜி.,யாக முருகன் கடந்தாண்டு ஜூலை 3ல் பொறுப்பேற்றார். சட்டசபை தேர்தலையொட்டி அவரை தேர்தல் பணியில்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்ய

தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இவருக்கு பதில் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஏ.டி.ஜி.பி., ஆபாஷ்குமார் இந்தாண்டு மார்ச் 23ல் நியமிக்கப்பட்டார்.

இதற்காக ஐ.ஜி., பணியிடம் ஏ.டி.ஜி.பி.,யாக தரம் உயர்த்தப்பட்டது. மார்ச் 26ல் பொறுப்பேற்ற ஆபாஷ்குமார் மீண்டும் சென்னைக்கே இடமாறுதல் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கொரோனா தொற்றுக்கு ஆளானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஏப்.,13ல் மேல் சிகிச்சைக்காக சென்னை சென்றார். டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தனிமைப்

படுத்திக்கொண்டு ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்று இடமாற்றப்பட்ட 15 அதிகாரிகளில் ஆபாஷ்குமாரும் ஒருவர். 49 நாட்களில் மீண்டும்

பொருளாதார குற்றப்பிரிவிற்கே மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் ஐ.ஜி., அந்தஸ்திலான திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அன்பு, தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தென்மண்டலத்தில் பணியாற்றி அனுபவம் பெற்ற ஏ.டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி.,முருகன் ஆகியோர் தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொரோனா தடுப்பு பணி கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்

தக்கது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X