மதுரை: கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதியம் 12:00 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தை தாண்டி பலரும் டூவீலர், கார்களில் மதுரை நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.இதுதொடர்பாக போலீசார் எச்சரித்துள்ளதாவது: தினமும் பொருட்கள் வாங்க வெளியே வரக்கூடாது. வீட்டு வினியோக சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பலசரக்கு, காய்கறிகளை வீட்டருகேதான் வாங்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத, நெரிசல் மிகுந்த கடைகள், சந்தைகள் மூடப்படும்.தேவை இல்லாமல் வலம் வருவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும்.இவ்வாறு எச்சரித்துள்ளனர்.