திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியிலுள்ள கிராமங்களுக்கு அம்மா கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சட்டசபை எதிர்கட்சி தலைவராக தேர்வான முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.டி.குன்னத்துார் அம்மா கோயிலுக்கு வருவோருக்கு இலவசமாக கபசுர குடிநீர் பொடி வழங்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் கபசுர குடிநீர் கஷாயம் காய்ச்சப்பட்டு ஒவ்வொரு நாளும் பத்து கிராமங்கள் வீதம் வழங்கப்படும் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.