நாங்க இருக்கோம்... தைரியமாக இருங்க: நம்பிக்கையூட்டும் இளம் மருத்துவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
22:07

மதுரை:கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து பயத்தில் உள்ளவர்களுக்கும், அறிகுறி உள்ளவர்களுக்கும் அலைபேசி வழியாக இலவசமாக 'கவுன்சிலிங்' கொடுத்து தைரியமூட்டி வருகிறார்கள் மதுரை இளம் மருத்துவர்கள்.



மதுரை மருத்துவக்கல்லுாரியில், 2019ல் எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்களில் சிலர் இன்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். கொரோனா நோயாளிகளையும் கவனித்து வருகின்றனர். பலர் நோய் முற்றிய நிலையில் வருவதால் அவர்களை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த இவர்களில், டாக்டர் ஜெயன் என்பவர், 'ஏன் நாம் அலைபேசி மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடாது' என்றுக்கூற, 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் 'நாங்க ரெடி' என முன்வந்தனர்.



இவர்களில் எல்லோருக்குமே வயது 25க்குள்தான். இரு வாரத்திற்கு முன் 'கவுன்சிலிங்' கொடுக்க ஆரம்பித்தனர். இன்று இந்தியா கடந்தும் அலைபேசி வழியாக 'கவுன்சிலிங்' கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.



நம் நிருபரிடம் டாக்டர் ஜெயன் கூறியதாவது: என் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட, அவருக்கு நம்பிக்கையூட்டி சில அடிப்படை மருத்துவ உதவிகளை செய்தேன். குணமான பின் அவர் என்னிடம், 'சிகிச்சையைவிட நீ பேசி தைரிய மூட்டியது தான் என்னை குணமடைய வைத்தது' என்றார். இதை தானே மற்றவர்களும் எதிர்பார்ப்பார்கள் என நினைத்து, மனநல பயிற்சி அளித்துவரும் என் ஆசிரியை ஷர்மிளாவிடம் பேசினேன்.



அவரது மதுரை ரத்தகொடையாளர்கள் -பூம் அமைப்பு வழியாக மக்கள் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தோம். அனு என்பவர் எங்களையும், மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறார். தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மக்கள் 74483 76060, 77080 31922ல் தொடர்பு கொண்டு நாங்கள் கேட்கும் விபரங்களுடன், மருத்துவர் பரிந்துரைத்த சீட்டு, 'சிடி' ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட விபரங்களை அனுப்பினால் நாங்கள் பார்த்து, தகுந்த அறிவுரைகளை வழங்குவோம்.



இதற்காக ஒவ்வொரு டாக்டருக்கும் ஒருமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்தும், மருத்துவ ஆவணங்களை வைத்தும் கொரோனாவா என யூகித்து மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். தற்போது சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும்கூட அழைப்புகள் வருகின்றன. தற்போதைய சூழலில் எங்களால் முடிந்த உதவிகளை இதுபோன்று செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X