விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்! தொற்றில் மீண்டவர்கள் 'டானிக்' :தேவையே இல்லை வீண் 'பேனிக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 மே
2021
04:58
பதிவு செய்த நாள்
மே 15,2021 23:29

கோவை:உலகத்தில் தோன்றிய, எல்லா தொற்று நோய்களும் ஒழிக்கப்பட்டுள்ளன. அது போல் இந்த கொரோனா தொற்றும் ஒழிக்கப்பட்டு விடும். அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதோடு, மக்களிடம் மன தைரியமும், கட்டுப்பாடும் இருந்தால் விரைவில் கொரோனா இல்லாத உலகம் உருவாகும் என, உறுதியாக கூறுகின்றனர் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்.


கொரோனா ஏற்படுத்தும் உடல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர, தடுப்பு மருந்துகள் ஓரளவு கைகொடுத்தாலும், குணமாகி விடுவோம் என்ற நம்பிக்கையும், தைரியமும் இந்த பெருந்தொற்றில் இருந்து மீள உதவும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.அறிகுறிகள் கண்டவுடன் பீதியடையாமல், டெஸ்ட் எடுத்து சிகிச்சை எடுத்தவர்களும், தீவிர சிகிச்சைப்பிரிவு வரை சென்றவர்களும், பத்திரமாக மீண்டு வந்துள்ளனர்.


மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல், வீடுகளில் தனிமை சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பலரும் குணமாகி வருகின்றனர்.நோயில் இருந்து பத்திரமாக மீண்டவர்கள் சொல்வதை படியுங்கள்!ஒரு வாரத்தில் 'ஓகே' ஆகிவிட்டது!நோய் தொற்று இந்த அளவுக்கு அதிகமாக, மக்கள் மத்தியில் உள்ள பயம்தான் காரணம். டி.வி., ரேடியோ, பேப்பர் என, எல்லாவற்றிலும், கொரோனா தொற்று பற்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். யாரும் கேட்பதில்லை. ஏதாவது அறிகுறி இருந்தால், உடனே டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டால், சிகிச்சையில் ஈசியாக மீண்டு விடலாம். எனக்கு ஒரு நாள் காய்ச்சல் இருந்தது.


டெஸ்ட் எடுத்தேன். ரிசல்ட் பாசிடிவ் என வந்தது. ஒரு வார சிகிச்சையில் சரியாகி விட்டது. பிறருக்கு பரப்பாமல் விழித்து கொண்டால், எல்லோரும் பிழைத்து கொள்ளலாம்.- பாலு கல்லுாரி


நுாலகர்மன உறுதி முக்கியம்


எங்கள் வீட்டில் நான்கு பேரில், மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோம். தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்து இருக்கிறோம். மறுபடியும் என் மகனுக்கு காய்ச்சல் வந்தது. டெஸ்ட் எடுத்த போது, சாதாரண காய்ச்சல் என்றனர். சிகிச்சைக்கு பிறகு இப்போது எல்லோரும் நலமாக இருக்கிறோம். உடலும், மனமும் உறுதியாக இருந்தால், கொரோனா மட்டுமல்ல, எந்த நோய் வந்தாலும் எதிர்த்து போராடலாம்.- பிருந்தா பள்ளி தலைமை ஆசிரியர்


உடனே டெஸ்ட் எடுக்கணும்


எங்கள் வீட்டில் அம்மா, தம்பி இருவருக்கும் காய்ச்சல் இருந்தது. டெஸ்ட் எடுத்ததில், மூவருக்கும் தொற்று உறுதியானது. அம்மா சுகர் பேஷன்ட். தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்த்தோம். இப்போது மூன்று பேரும் குணமாகி வீட்டுக்கு வந்து விட்டோம். உடனே டெஸ்ட் எடுத்து மருத்துவமனைக்கு போனதால், எங்களுக்கு பிரச்னை இல்லை. பலபேர் காய்ச்சல், சளி இருந்தாலும் பயந்து கொண்டு, டெஸ்ட் எடுக்க போவதில்லை. அவர்கள் மூலம் பலருக்கு பரவுகிறது. மக்கள் இதை தவிர்க்க வேண்டும்.- ஜெயகுமார் ஊர் காவல்படை தலைவர்


மனதை திடப்படுத்தணும்


எனக்கு மூன்று நாட்கள் காய்ச்சல், சளி இருந்தது. பரிசோதனையில், பாசிடிவ் வந்தது. சி.டி.ஸ்கேன் எடுத்த போது, 25 சதவீதம் வைரஸ் பாதிப்பு இருந்தது. தனியார் மருத்துவமனையில் மூன்று நாட்கள் அட்மிட் ஆகி இருந்தேன். காய்ச்சல், சளி சரியாகி விட்டது. வீட்டுக்கு வந்து, 15 நாட்கள் தனிமையில் இருந்தேன். உடல் சோர்வு அதிகமாக இருந்தது. 40 நாட்கள் சிரமப்பட்டேன். இப்போது சரியாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மனதை திடப்படுத்தி கொள்ள வேண்டும். குணமடைந்த பிறகும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.-ராஜேஷ் தொழில் முனைவோர்



தைரியமாக இருந்தேன்


கொரோனா முதல் அலையின் போது, எனக்கு பாசிடிவ் ஆனது. நுரையீரலில் 14/25 என்ற அளவில் வைரஸ் பாதிப்பு இருந்தது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதால், பயமாக இருந்தது.மருத்துவமனையில் இருந்த நாட்கள் கஷ்டமாக இருந்தது. எது நடந்தாலும் சரி என, இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு தைரியமாக இருந்தேன், 15 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆனேன். இப்போது நன்றாக இருக்கிறேன். தொற்றில் இருந்து மீண்டு, வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கி வந்து விட்டேன். எந்த நிலையிலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.- கேசவன் மென்பொருள் ஆலோசகர்


நம்பிக்கை இழக்க வேண்டாம்


எனக்கு பாசிடிவ் ஆன போது, எங்கள் அபார்ட்மென்டையே சீல் வைத்து மூடி விட்டனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட்டில் 20/40 என்ற அளவில் வைரஸ் பாதிப்பு இருந்தது. ஆக்சிஜன் தேவைப்படவில்லை. ஆறு டோஸ் ரெம்டசிவிர் போட்டனர். ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையோடு, எஸ்.பி.பி., ஏசுதாஸ் பாடல்களை மொபைலில் கேட்டுக்கொண்டு, தைரியமாக தனிமையில் இருந்தேன். மீண்டு விட்டேன். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். இதுவும் கடந்து போகும்.-அசோக் தனியார் நிறுவன மேலாளர்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X