தனியார் அறக்கட்டளையின் ப்ரீ ஆம்புலன்ஸ்! 1077 க்கு அழைத்தால் பறந்து வரும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
23:41

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு, அழைத்து வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள், இஷ்டத்துக்கு பணம் பறிப்பதால், பொதுமக்களுக்கு உதவும் வகையில், நன்றி அறக்கட்டளையினர், 5 இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளனர்.கொரோனா தொற்றால் பாதித்து, உயிருக்கு போராடிக் கொண்டிருப்போரை, மருத்துவமனைக்கு அழைத்து வர, உறவினர்கள் மிகுந்த போராட்டத்துக்கு உள்ளாகின்றனர். நோயாளிகளை அழைத்து வரும் தனியார் ஆம்புலன்ஸ் வைத்திருப்போர், அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.சமீபத்தில், பெருந்துறையில் இருந்த தனது கணவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு பெண்மணியிடம், 30 ஆயிரம் ரூபாயை, ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டார்.அவரிடம் அவ்வளவு தொகை கைவசம் இல்லை. கண்ணீரை துடைத்துக் கொண்டு, கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்து, இதை விற்று, தொகையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.அதற்கும் மசியாத அந்த டிரைவர், 'ஊரடங்கு சமயத்தில் எங்கு போய் விற்பது; நீங்களே விற்று விட்டு, பணத்துடன் வாங்க; அதுவரை காத்திருக்கிறேன்' என, ஈவு இரக்கமின்றி, அந்த டிரைவர் கூறினார். மிகுந்த போராட்டத்துக்கு பின், பணம் கொடுக்கப்பட்டது.இதையறிந்த நன்றி அறக்கட்டளை உறுப்பினர்கள் தாமாக முன்வந்து, 8 மணி நேரம் பயன்படுத்தும் அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய, 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளனர். 1077 என்ற எண்ணுக்கு அழைத்து, ஆம்புலன்ஸ் கேட்டால், இலவசமாக இச்சேவை கிடைக்கும்.தனியார் ஆம்புலன்ஸ் நடத்துவோரின் அடாவடி, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அரசே கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பெருந்துறையில் இருந்த தனது கணவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு பெண்மணியிடம், 30 ஆயிரம் ரூபாயை, ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டார். அவரிடம் அவ்வளவு தொகை கைவசம் இல்லை. கண்ணீரை துடைத்துக் கொண்டு, கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்து, இதை விற்று, தொகையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X