பில்லுார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
23:47

மேட்டுப்பாளையம்:பில்லுார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதையடுத்து, அணைக்கு வினாடிக்கு, 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் பில்லுார் அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி. பாதுகாப்பு கருதி, 97 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைப்பது வழக்கம். கடந்த ஒரு மாதமாக, 83 அடிக்கு குறைவாகவே நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய, தண்ணீர் திறப்பதால், நீர்மட்டம் குறைந்து வந்தது. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஏதும் இல்லாததால், அணைக்கு வினாடிக்கு, 150 கன அடிக்கு குறைவாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று காலை வினாடிக்கு, 45 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் அது உயர்ந்து மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது அணையின் நீர்மட்டம், 87 அடியாக உள்ளது. இன்னும் அணை நிரம்ப பத்தடியே உள்ளது. அணை நிரம்பிய உடன், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படும். இதனால் எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X