மூங்கிலில் சைக்கிள் தயாரிக்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
23:54

மூங்கில்கள் பொதுவாகவே மிகவும் வலிமையானவை. மூங்கில் வீடுகளுக்கான கட்டமைப்பு பொருளாகவும், பொதுவாக சாரக்கட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது.இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி சஷி சேகர் பதக், மூங்கில் இருந்து பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த ஒரு பயிற்சி பற்றிய ஒரு 'டிவி' நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வந்த ஐடியா தான் மூங்கிலிருந்து சைக்கிள் தயாரிக்கும் முயற்சி.அதன்பின், 'பாம்புச்சி' (Bamboochi) என்ற நிறுவனத்தை துவக்கினார். புனேவிலிருந்து 60 கி.மீ., துாரத்திலுள்ள போர் கிராமத்தில் உள்ள தனது பண்ணையில் வளர்க்கப்பட்ட மூங்கிலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான வழிகளை பதக் கண்டுபிடிக்க துவங்கினார்.அடுத்த இரண்டு ஆண்டில், முன்மாதிரியை (proto type) உருவாக்க அவர் செலவிட்டார். அதில் பெற்ற வெற்றியில் பதக் தனது மனைவி தேவிகாவுடன் சேர்ந்து மூங்கிலில் இருந்து கையால் செய்யப்பட்ட, மடிக்கக்கூடிய மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் பயனளிக்கக்கூடிய சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கினார்.இவரது, சைக்கிளின் ப்ரேம் ஒரு குறிப்பிட்ட வகை மூங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இது எடை குறைவாகவும் மற்றும் அதிக வலிமையானதாகவும் இருக்கிறது. இது பெரும்பாலான அலாய் ஸ்டீல்களை விட வலுவானது மற்றும் இலகுவானது.ஆனால் கியர்கள், பிரேக்குகள் மற்றும் டயர்கள் போன்ற பிற பாகங்களுக்கு மூங்கில் ப்ரேமில் இடமளிப்பது இவர்களுக்கு ஒரு ஒரு சவாலாக இருந்தது.இன்று, இவர்கள் வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு ஏற்ப பல மாடல்களை உருவாக்குகின்றனர். வர்த்தக ரீதியான மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஓட்டக்கூடியது, உடல் எடைக்கு தகுந்த மாதிரியானவை என்று பலதரப்பட்ட சைக்கிள்களை தயாரிக்கின்றனர். இவர்கள் மூங்கிலால் 'இ--பைக்'கும் தயாரிக்கின்றனர். அது லித்தியம் அயன் பேட்டரியில் இயங்குகிறது. தற்போது இவர்களது மூங்கிலினால் ஆன சைக்கிள், பிரான்ஸ் நாட்டிலிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இணையதளம்:www.bamboochicycle.com.சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் எண்: 98204-51259, இணைய தளம்: www.startupandbusiness news.com - சேதுராமன் சாத்தப்பன் -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X