சாலை மறியல்! சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் ....300 பேருக்கு மட்டுமே 'ரெம்டெசிவிர்' மருந்து கிடைக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 மே
2021
06:31
பதிவு செய்த நாள்
மே 16,2021 01:47

சென்னை:சென்னை, நேரு விளையாட்டு அரங்கில், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை நேற்று துவங்கியது. ஒரு நாளைக்கு, 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுவதால், பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்கப்படுகிறது. பலருக்கு மருந்து தேவைப்படுகிறது.தனியார் மருத்துவமனைகளில், மருந்து தட்டுப்பாடு காரணமாக, தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஏப்ரல், 26ம் தேதி முதல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அங்கு, அதிகளவில் கூட்டம் கூடியதால், திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.



ஆனாலும், கீழ்ப்பாக்கத்தில் கூட்டம் குறைந்தப்பாடில்லை.இதனால், மருந்து விற்பனை, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை, நேற்று துவங்கியது. நள்ளிரவு முதலே, மருந்து வாங்க மக்கள் திரள துவங்கினர்.ஏற்கெனவே, முன்பதிவு செய்தவர்கள், புதிதாக வந்தவர்கள் என, இரண்டு வரிசைகளில், 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.காலை, 9:00 மணிக்கு, நான்கு கவுன்டர்களில் துவங்கிய மருந்து விற்பனையில், ஒருவரை, ஒருவர் தள்ளிக்கொண்டு, சமூக இடைவெளி இல்லாமல், மருந்து வாங்க உள்ளே சென்றனர்.அப்போது தினமும், 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என்ற அறிவிப்பால், வரிசையில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து, மருந்து வாங்க வந்தோர் கூறியதாவது:'ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தில்லை. மருந்துக்காக அலைய வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவிக்கிறது. பின், எதற்கு டாக்டர்கள், ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வருமாறு சொல்கின்றனர்; அரசே ஏன் இந்த மருந்தை விற்பனை செய்ய வேண்டும்?மருந்து விற்பனையை அரசு நிறுத்தி விட்டால், டாக்டர்களும், எங்களை மருந்து வாங்கி வரும்படி சொல்ல மாட்டார்கள். எதற்காக, அரசு பொது மக்களை கஷ்டப்படுத்துகிறது.மருந்து விற்பனையில் திட்டமிடல் இல்லாததால், வாங்க வருபவர்களுக்கும் தொற்று ஏற்படும் நிலை தான் உள்ளது.



பாதுகாப்பு பணியில், போலீசார் மட்டுமே உள்ளனர்.சுகாதாரத் துறை அதிகாரிகள் யாருமில்லை. பல மணி நேரம் வரிசையில் நிற்கிறோம். குடிக்க தண்ணீர் வசதி கூட இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மே-202114:53:02 IST Report Abuse
Natarajan Ramanathan சுடலை அரசு இந்த ரெம்டெசிவர் மருந்து வேண்டுபவர்கள் அரசு கருவூலத்தில் புரோக்கர் மூலம் சலான் வாங்கி தலைமை செயலகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மட்டுமே பணம் செலுத்தி ரசீது வாங்கி வந்தால் மட்டுமே நொன்னா அறிவாலயத்தில் இந்த மருந்தை வழங்குவதாக அறிவித்தால் கொரானா பிரச்சினை உடனே தீர்ந்துவிடாதா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மே-202114:46:10 IST Report Abuse
Natarajan Ramanathan அரசுக்கு சுத்தமாக நிர்வாக திறமை துளியும் இல்லை. இதை அறிவாலயத்தில் மட்டும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X