'சாம்சங்' நிறுவனம் மாநகராட்சிக்கு உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2021
06:01

சென்னை : சென்னை மாநகராட்சிக்கு, சாம்சங் நிறுவனம் சார்பில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால், ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும், மாநகராட்சிக்கு உதவி வருகின்றன. அதன் அடிப்படையில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், பெருநிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சிக்கு, முதற்கட்டமாக, 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இவற்றை, கொரோனா சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை செயலருமான சித்திக், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர், ரிப்பன் மாளிகையில் நேற்று பெற்றுக் கொண்டனர்.


அப்போது, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 7.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு, 975 ஆக்சிஜன் உருளைகள், 3.5 லட்சம் எல்.டி.எஸ்., சிரஞ்சிகள் வழங்கப்படும் என, அந்நிறுவனத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்தார். இவர்களின் சேவையை பாராட்டிய மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தொடர்ந்து, மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X