குறைகள் கூறுவதை விடுத்து மக்களை காக்க வேண்டும் | மதுரை செய்திகள் | Dinamalar
குறைகள் கூறுவதை விடுத்து மக்களை காக்க வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மே
2021
06:35

திருமங்கலம்: ''தமிழக அரசு எதிர்க்கட்சியை போல் குறை கூறுவதை விடுத்து சவால்களை எதிர்கொண்டு மக்களை காக்கவேண்டும்,''

என, திருமங்கலம் தொகுதி டி.குன்னத்துாரில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கி முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: கொரோனா முதல் அலையின் போது கவனக்குறைவாக செயல்பட்ட

தால் தான் தற்போது தொற்று அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

முதல் அலையின் போது போர்க்கால அடிப்படையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி

நடவடிக்கை எடுத்தார். வீட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காய்கறி, பலசரக்கு போன்றவற்றை வீடுகளிலேயே வழங்கினோம். அதேபோல் நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X