ஊரடங்கை மீறிய 210 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2021
06:36

மதுரை: கொரோனா பரவலை தடுக்க மே 24 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதை மீறி நகரில்வலம் வந்த 207 பேர் மீதும்,மாவட்டத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக 1311 பேரிடம்ரூ.2.62 லட்சமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 36 பேரிடம் ரூ.18 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

வழிப்பறி; மூவர் கைது

அலங்காநல்லுார்: சமயநல்லுார் போலீஸ் உதவி கோட்டத்திலுள்ள வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நகை பறிப்பு, வழிப்பறி குறித்து எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், வெங்கடேஷ், மகேந்திரன், விஜி, சரவணன் விசாரித்தனர். இதில் ஈடுபட்டதாக மதுரை ஆனையூர் தங்கவேல் மகன் கார்த்திக் ராஜா 26, ராமசாமி மகன் ரமேஷ் 24, மோகன் குமார் மகன் ஹரிகரனை 24, கைது செய்து 32 பவுன் நகைகள், 3 டூவீலர்களை

பறிமுதல் செய்தனர். நகை பறிப்பு

உட்பட கார்த்திக் ராஜா மீது 24, ரமேஷ் மீது 15, ஹரிகரன் மீது 6 வழக்குகள் உள்ளன.

முதியவர் பலி

ஆஸ்டின்பட்டி: உசிலம்பட்டி கொடிக்குளம் பாண்டி 66. மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இவரை மகன் நிலையூர் தனியார் முதியோர் காப்பகத்தில் அனுமதித்தார். நான்கு நாட்களுக்கு முன் கழிப்பறையில் வழுக்கி விழுந்த பாண்டி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் திருட்டு; 4 பேர் கைது

கூடக்கோவில்: எஸ்.ஐ., குபேந்திரன் மற்றும் போலீசார் சின்ன உலகாணியில் ரோந்து சென்றார். கண்மாயில் அனுமதியின்றி கிராவல் மணல் திருடிய அப்பகுதி லிங்கசாமி, மணிகண்டன், முத்துமாரி, ராஜ பகவதியை கைது செய்து, மணல் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரியையும்

பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

பேரையூர்: அத்திபட்டியில் வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மது விற்ற முருகன், ரோந்து சென்ற சாப்டூர் போலீசாரை கண்டதும் தப்பினார். போலீசார் அங்கிருந்த 430 மது

பாட்டில்களை பறிமுதல் செய்து முருகனை தேடி வருகின்றனர்.

கொலை முயற்சி; ஒருவர் கைது

அலங்காநல்லுார்: 15 பி. மேட்டுப்பட்டி புவனேஷ்வரன் 34, மளிகை கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம்மாலை அடைக்கப்பட்ட கடையை திறந்து சிகரெட் தரும்படி

அப்பகுதி செல்வம் மகன் ராம்குமார் 23, தகராறு செய்தார். பின் அரிவாளால் வெட்டியதில்

புவனேஷ்வரன் பலத்த காயமுற்றார்.ராம்குமாரை இன்ஸ்பெக்டர் நடேசன்மற்றும் போலீசார் கைது செய்தனர்.அவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

மகள் இறப்பில் மர்மம்

தந்தை புகார்உசிலம்பட்டி: கீரிபட்டி முருகசாமிக்கும்30, சுளிஒச்சான்பட்டி செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கும் 20, 2018 திருமணம் நடந்தது. முருகசாமி கஞ்சா வியாபாரம் செய்து சமீபத்தில் கைதாகி மே 10 வெளியே வந்தார். போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். மனமுடைந்த பிரியதர்ஷினி கீரிப்பட்டியில் தோட்டத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக செல்வம்கொடுத்த புகாரின்படி உசிலம்பட்டி போலீசார், ஆர்.டி.ஓ., ராஜ்குமார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்றவர் சிக்கினார்

வாடிப்பட்டி: இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார் அய்யங்கோட்டையில் ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற கருப்பையாவை 50, கைது செய்தனர்.

ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

தடையை மீறிய75 பேர் மீது வழக்கு

உசிலம்பட்டி: கொரோனா தடையுத்தரவை மீறி சங்கிலி தலைமையில் தமிழ் தேசிய பா.பி., துவக்க விழா நடந்தது. வி.ஏ.ஓ., முருகன் புகாரின்படி போலீசார் விசாரித்து சங்கிலி,

முருகன், செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X