8,90,912 கார்டுதாரர்களுக்கு கொரோனா உதவி தொகை | மதுரை செய்திகள் | Dinamalar
8,90,912 கார்டுதாரர்களுக்கு கொரோனா உதவி தொகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மே
2021
06:38

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டத்தில் 8,90,912 அரிசி கார்டு தாரர்களுக்கு கொரோனா நிவாரண முதற்கட்ட உதவிதொகை தலா ரூ.2000 வழங்கும் பணி துவங்கியது.

மதுரை கிழக்கு ஒன்றியம் செட்டிகுளம் மற்றும் அலங்காநல்லுாரில்அமைச்சர் மூர்த்தி உதவி தொகை வழங்குவதை துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏ., வெங்கடேசன்,டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ், பாண்டியன் கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ., முருகானந்தம், தாசில்தார் பழனிக்குமார், துணை பதிவாளர்கள்

சரவணன், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமூக இடைவெளி மிஸ்சிங்:அலங்காநல்லுாரில் வாடிவாசல் முன் நிவாரணம் பெற 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 700க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி, முககவசம் இன்றி கூடினர். நோய் தொற்று அபாயம் ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X