கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தொகை; மாவட்டத்தில் முதல் தவணை வினியோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2021
17:43

நாமக்கல்: கொரோனா ஊரடங்கு கால நிவாரணத் தொகை முதல் தவணையாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கும் பணி நாமக்கல் மாவட்டத்தில் துவங்கியது.



தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்த தொகை, இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, கடந்த, 10ல், சென்னையில் முதல்வர் துவங்கி வைத்தார். நேற்று, தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில், கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தொகை வழங்கும் பணி துவங்கியது. அதற்காக, சம்பந்தப்பட்ட அரிசி கார்டுதாரர்களின் வீடுக்கு சென்ற ரேஷன் கடை பணியாளர்கள், தினமும், 200 பேருக்கு வழங்கும் வகையில், டோக்கன் வினியோகம் செய்திருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, அனைத்து ரேஷன் கடைகளிலும், கொரோனா ஊரடங்கு கால நிவாரண முதல் தவணை தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் துவக்கி வைத்தார். கூட்டுறவு இணை பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பார் ராஜேஷ்குமார், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


* திருச்செங்கோடு, செங்கோடம்பாளையம் ரேஷன் கடையில் நிவாரணத் தொகை வழங்கும் பணியை, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் துவக்கி வைத்தார். அதேபோல், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலூர், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில், நிவாரண தொகை வழங்கும் பணி துவங்கியது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X