நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேர் இறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2021
18:03

நாமக்கல்: மாவட்டத்தில், நேற்று, ஒரே நாளில், கொரோனா நோயாளி இருவர் உள்பட, 11 பேர் உயிரிழந்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின், இண்டாவது அலை, அதிகரித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 350க்கும் மேல் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 300 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில், இரண்டு பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும், பிற நோயாளிகள் ஒன்பது பேர் என, ஒரே நாளில், நாமக்கல்லில், 11 பேர், இறந்துள்ளனர்.


இது குறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 300 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 140 பேர் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். அவர்களுக்கு போதிய ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று), கொரோனா நோயாளிகள் இரண்டு பேர், மாரடைப்பு மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒன்பது பேர் என, மொத்தம், 11 பேர் இறந்துள்ளனர். கொரோனா அறிகுறி இருக்கும்போதே நோயாளிகள் வருவதில்லை. மாறாக, தாமதமாக வருகின்றனர். அதேபோல், தனியார் மருத்துவமனையில், முடியாத நிலையில் அனுப்புகின்றனர். நெகட்டிவ் வந்த பின், வீட்டுக்கு சென்றவர்கள், சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், அசட்டையாக இருப்பவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X