பிளாஸ்டிக் குப்பையால் மாசுபடும் வேந்தோணி கால்வாய் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பிளாஸ்டிக் குப்பையால் மாசுபடும் வேந்தோணி கால்வாய்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 மே
2021
22:50

பரமக்குடி : பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள வேந்தோணி கால்வாய் பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டுள்ளது.


பரமக்குடி அருகே, பார்த்திபனூர் வைகை ஆற்றில் மதகு அணை உள்ளது. அங்கிருந்து வலது இடது, பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கண்மாய்கள் துார் வரப்பட்டன. தொடர்ந்து நீர்வழிப் போக்காக உள்ள கால்வாய்கள் பலவும் கருவேல மரங்கள் அடர்ந்து உள்ளது.முக்கியமாக பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் வேந்தோணி கால்வாய் செல்கிறது. இதில் கழிவுநீர் விடப்படுவதுடன், ஊராட்சியில் இருந்து அள்ளப்படும் குப்பை அனைத்தும் கொட்டும் இடமாக உள்ளது.


இதனால் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பியுள்ளது.தண்ணீர் செல்லும் காலங்களில் பிளாஸ்டிக் குப்பை அனைத்தும் கண்மாய்களில் சேரும் நிலை உள்ளது. இதனால் ஊற்று நீருக்கு சிக்கல் ஏற்படு வதுடன், தண்ணீர் கடந்து செல்லவும் முடியாத நிலை உள்ளது.ஆகவே ஒன்றிய நிர்வாகம் இங்கு கொட்டப்படும் குப்பைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X