ஆழியாறு பாசனத்துக்கு நீர் திறப்பு: நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
01:00

ஆனைமலை:ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஒரு போகத்தில் மட்டுமே, 6,400 ஏக்கர் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் மே, 16 முதல் ஏப், 15 வரை, இரண்டு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.விவசாயிகளின் கோரிக்கைப்படி நேற்று, ஆழியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அக்., 15 வரை, 153 நாட்களுக்கு, 1,205 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அணையின், 120 அடி உயரத்தில், 92.85 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. வினாடிக்கு, 471 கனஅடி நீர் வரத்து இருந்தது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தினமும், 120 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'ஆண்டுதோறும், 11 மாதங்களுக்கு பாசன நீர் வழங்க வேண்டும். 2012ம் ஆண்டு மே, 16ல் பாசன நீர் திறக்கப்பட்டது. அதன்பின் இதுவரை, பாசன நீர் ஒப்பந்தப்படி வழங்கவில்லை. நடப்பாண்டு, பி.ஏ.பி., பாசன முறை சட்டப்படி, தண்ணீர் திறக்கப்பட்டது, மகிழ்ச்சியளிக்கிறது. இதனால், உரிய பருவத்தில் நெல் சாகுபடி செய்து, பலன் பெற முடியும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X