ஆக்சிஜன் வீணாகாமல் சிகிச்சை: மருத்துவமனைக்கு பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
01:04

கோவை:கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜனை வீணாக்காமல் சிகிச்சை அளித்த கோவை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கொரோனாவால் தமிழகத்தில், ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜனை வீணாக்காமல் முறையாக பயன்படுத்த சுகாதார துறை அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டது.அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அலுவலர் முருகானந்தம் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன்களுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினர். கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை வீணாக்காமல் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்பதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''கொரோனா நோயாளிகளுக்காக, 1,284 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 840 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடவை. எங்களிடம், 13 கி.லி., அளவில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ளது. இருப்பினும், தினமும், 4 கி.லி., தான் கிடைக்கிறது. ஆக்சிஜன் வீணாகாமல் வழங்கும் வகையில், மயக்கவியல் துறை டாக்டர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறித்து கண்காணித்து, வழங்கி வருகின்றனர்.மாநில அளவில் ஆக்சிஜன் வீணாகாமல் தடுப்பதில் முன்னிலை பெற்றுள்ளோம். நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் அளிக்க முடிகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X